உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேரோட்டம்!

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேரோட்டம்!

புதுச்சேரி : முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. புதுச்சேரி, முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 44வது பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது.முக்கிய நிகழ்வாக, தேர் திருவிழா நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, நகர வீதிகள் வழியாக, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !