பொள்ளாச்சி கோவில்களில் வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை!
ADDED :3743 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று வரலட்சுமி விரத சுமங்கலி பூஜை நேற்று மாலை நடந்தது. விழாவில், திரளான பெண்கள் பங்கேற்றனர். இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் வரலட்சுமி விரத பூஜைகள் நடந்தன.