உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா கோலாகலம்

அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா கோலாகலம்

மோகனூர்: அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலில், தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. மோகனூர் யூனியன், பேட்டப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மணியங்காளிப்பட்டியில், அன்னை வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, பள்ளிபாளையம் எஸ்.பி.பி., காலனி பங்குதந்தை இக்னேசியஸ் பிதேலிஸ் தலைமையில், கொடியேற்றம், திருச்செபமாலை, நவநாள், திருப்பலி நடந்தது. மறுநாள், சேலம், மூவேந்தர் அரங்க இயக்குனர் கோபி இமானுவேல் தலைமையில், திருச்ஜெபமாலை, சிறப்பு நவநாள் நடந்தது. நேற்று முன்தினம், மாலை, 5.30 மணிக்கு, திருச்செங்கோடு வட்டார முதன்மைக்குழு நிர்வாகி ஆசைதம்பி தலைமையில், திருவிழா சிறப்புத் திருப்பலி நடந்தது. இரவு, 10 மணிக்கு, அலங்கரிக்கப்பட்டு மின் தேரில், அன்னை வேளாங்கண்ணி மாதா எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினார். வழிநெடுகிலும் ஏராளாமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மாலை அணிவித்தும், அன்னையை வணங்கினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று இரவு நன்றி வழிபாடு, கொடி இறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பங்கு தந்தை செல்வம் பிரான்சிஸ் சேவியர், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !