ஆடிப்பூர விழாவில் ெசவ்வாடை பக்தர்கள்
ஊட்டி: ஊட்டியில் நடந்த ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின், நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில் ஆடிப்பூர பெருவிழா நடந்தது. காலை, 7:00 மணிக்கு, சேரிங்கிராஸ் மேல் மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், நீலகிரி மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாக குழுவின் மாவட்ட தலைவி இந்திராணி தலைமையில், சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜ்ய சபா எம்.பி., அர்ஜூனன், மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் மணி முன்னிலை வகித்தனர். பின், ஊட்டி பஸ் ஸ்டாண்டு பாறை முனீஸ்வரர் கோவிலில் இருந்து, சேரிங்கிராஸ் வழிபாட்டு மன்றம் வரை கஞ்சி வார்த்தல் நடந்தது. ஆன்மிக இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன் தலைமை வகித்தார். ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். ஆன்மிக ஊர்வலத்தை ஊட்டி டி.எஸ்.பி., முருகுசாமி துவக்கி வைத்தார். மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. பின், 100 பேருக்கு ஆடை தானம், ஏழை பள்ளி மாணவ, மாணவியருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊட்டி நகராட்சி தலைவி சத்தியபாமா, ஆன்மிக இயக்க நிர்வாக குழு மாவட்ட துணைத் தலைவர் மணிபாலன், பொருளாளர் சுந்தர்ராஜ், ஊட்டி நகராட்சி துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.