உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் நாளை கும்பாபிஷேகம்

அன்னுார்: அழகாபுரி நகரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், புதிதாக சிற்ப சாஸ்திரப்படி, தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை அம்மன் மற்றும் முருகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, இன்று (மாலை 6:00 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. இரவு யாகசாலை பூஜை, கோபுர கலசம் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. செப்., 2ம் தேதி அதிகாலையில், வேத பாராயணம் நடக்கிறது. காலை 5:30 மணிக்கு விமான கோபுரம், மூலஸ்தான் விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !