உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மீட்பு!

வடாரண்யேஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் மீட்பு!

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர்  கோவில் வளாகத்தில் அன்னதானகூடம் கட்ட பள்ளம் தோண்டிய போது, கருங்கல்லாலான  ஆறு சுவாமி சிலைகள் கிடைத்தன. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள, வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காட்டில் அமைந் துள்ளது. அங்கு, தினசரி, 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  பல்வேறு மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.  தினசரி மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு, உரிய அன்னதான மண்டபம்  இல்லை. அதையடுத்து, கோவில் வளாகத்திலேயே, 55 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் அன்னதான கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.  இந்த நிலையில், நேற்று நண்பகல், அன்னதான கூட கட்டுமான பணிக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு, பள்ளம் தோண்டப்பட்ட போது, ஒரு அடி உய ரமுள்ள விநாயகர், முருகன், இரண்டு அடி உயரமுள்ள திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மற்றும் ஒரு அடியார் என, ஆறு கருங்கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பத்திரமாக கோவில் வளாகத்தில் உள்ள தனிஅறையில் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !