கிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை!
ADDED :3895 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் பெருமாள் கோவிலில், ஆவணி அவிட்டம் விழா நடந்தது. இக்கோவிலில், ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், அரிசிமாவு, சந்தனம் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின், பெருமாளுக்கு, திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், சொலவம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.