உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை காணிக்கை!

வேம்புலி அம்மனுக்கு சீர்வரிசை காணிக்கை!

திருவள்ளூர்: திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில், பக்தர்கள் அம்மனுக்கு சீர்வரிசை காணிக்கை செலுத்தினர். திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில், 10 நாள் ஜாத்திரை உற்சவம், கடந்த மாதம், 28ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மன், தினமும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.விழாவின், ஐந்தாவது நாளான நேற்று, முன்தினம் காலை, அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. மாலை, பக்தர்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு படைத்து, காணிக்கை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !