உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

மன்னார்சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி மற்றும் பச்சை வாழியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.   விழாவை முன்னிட்டு கடந்த 31ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 1ம் தேதி காலை ஸ்ரீசுத்த ஹோமம், உத்தமபட்ச யாகசாலை, மாலை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து 2ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்  தது. கும்பாபிஷேக தினமான இன்று 3ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் தொடர்ந்து 8:00 மணிக்கு மேல் 9:30   மணிக்குள் விநாயகர், கிராம தேவதைகள், கெங்கையம்மன், மாரியம்மன், ஐயனார் கோவில்களுக்கு கும்பாஷேகம் நடக்கிறது. அதனையடுத்து 10:00 மணிக்கு மேல் 11:15 மணிக்குள் பச்சை வாழியம்மன், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !