உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப். 9ல் சுவாமிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!

செப். 9ல் சுவாமிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்!

சுவாமிமலை: அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான, சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில், செப்., 9ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.சிவனுக்கு உபதேசித்த குருவாக முருகன், சுவாமிமலையில் அருள்பாலிக்கிறார். பிரபவ முதல் அட்சய வரையுள்ள ௬௦ தமிழ் ஆண்டுக்குரிய தேவதைகள் இங்கு மலைப் படிகளாக உள்ளன.

அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பெருமை உடையது. பிரம்மா, இந்திரன், கார்த்தவீர்யார்ஜுனன், வசு ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை 8 மணிக்கு மிருதசங்கிரகணம், 10.30 மணிக்கு யாகசாலை அலங்காரம், நாளை காலை 8 மணிக்கு தீர்த்த சங்கிரகணம், மாலை 6 மணிக்கு கலா கர்ஷணம், இரவு 7 மணிக்கு யாக சாலை பிரவேசம், இரவு 8.30 மணிக்கு முதல் கால பூர்ணாஹுதி, செப்., 7 காலை 7 மணிக்கு விசேஷ சந்தி, பகல் 12 மணிக்கு இரண்டாம் கால பூர்ணாஹுதி, இரவு 7.15 மணிக்கு மூல மந்திர ஹோமம், 9 மணிக்கு மூன்றாம் கால பூர்ணாஹுதி, செப்., 8 காலை 9 மணிக்கு யாக பூஜை, பகல் 12 மணிக்கு நான்காம் கால பூர்ணாஹுதி, இரவு 9 மணிக்கு ஐந்தாம் கால பூர்ணாஹுதி நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, செப்., 9 காலை 5.30 மணிக்கு பிரதான யாக மகா பூர்ணாஹுதி, 6 மணிக்கு கடம் புறப்பாடு, 6.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் வேத, தேவார பாராயணம், சொற்பொழிவு, இசை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !