உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மகாமகம் திருவிழா முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு!

கும்பகோணம் மகாமகம் திருவிழா முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், மகா மகம் தொடர்பான, முதல்கட்ட முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார்.

கும்பகோணம் மகாமகத் திருவிழா முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு குறித்து, மாவட்ட கலெக்டர் சுப்பையன் ஆய்வு நடத்தினார். அதில், பாதுகாப்பு பணிக்கு வரும் வெளியூர் போலீஸார் தங்க வைக்கப்படும் இடம், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை, குடிநீர் தொட்டி ஆகியவற்றை பார்வையிட்டு, தேவையான மேம்பாட்டு பணிகளை விரைந்து செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், போலீஸார் தங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் கல்லூரி, அரசு ஆண்கள் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரிகளில் தேவையான அடிப்படை வசதி உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கும்பகோணம் மகாமக கலையரங்கம், மகாமக குளம், அரசு ஆடவர், மகளிர் கல்லூரி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், கும்பகோணம் சப்-கலெக்டர் கோவிந்தராவ், ஆர்.டி.ஒ., சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்.பி., தருமராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !