உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

திருப்போரூர் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

திருப்போரூர்: திருப்போரூர் பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தவர் விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 17ம் தேதி, நாடு முழுவதும் கொண்டாடப்படஉள்ளது.

இவ்விழாவின்போது, வீடுகளில் களிமண்ணாலான சிறு விநாயகர் சிலை வைத்து
வழிபடுவதுடன், பொது இடங்களில் பெரிய அளவிலான சிலைகளை வைத்தும் வழிபடுவது வழக்கமாக உள்ளது.இதற்காக, விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள், நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகின்றன. திருப்போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

சாலையோரத்தில் குடும்பத்துடன் தங்கியுள்ள அவர்கள், களிமண், மரக்கூழ் ஆகியவற்றை கொண்டு, 3 அடி முதல் 10 அடி உயரத்தில், பல்வேறு வடிவங்களில், விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.இதுகுறித்து, திருப்போரூரில் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தவர் கூறுகையில், நாங்கள் சிலைகளை தயாரித்து, அதற்கு வண்ணம் தீட்டாமல் இருப்பு வைத்துள்ளோம். சிலை வாங்குபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வண்ணம் தீட்டி விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !