உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர விநாயகர் கோவிலில் திருப்பணிக்கு பூமி பூஜை

சுந்தர விநாயகர் கோவிலில் திருப்பணிக்கு பூமி பூஜை

புதுச்சேரி: சுந்தர விநாயகர் கோவில் திருப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. தட்டாஞ்சாவடி சுப்பையா நகர் சுந்தர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, ராஜகோபுரம், பெருமாள் சன்னதி, துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சிவன், ஆஞ்சநேயர் சன்னதிகள் அமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலஸ்தாபனம் செய்விக்கப்பட்டது. சுப்பையா நகர் நல வாழ்வு சங்க தலைவர் சூரி, துணைத் தலைவர் மூர்த்தி, பொதுச் செயலாளர் ரமேஷ். துணை பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த், பொருளாளர் ஹரிகரன், துணை பொருளாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !