உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா

காஞ்சிபுரம் ராமானுஜர் கோவிலில் திருவாதிரை விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் உள்ள, ராமானுஜர் கோவிலில், நேற்று, திருவாதிரை விழா நடந்தது. செவிலிமேடு பகுதியில், ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் பராமரிப்பில், இந்த கோவில் இருந்து வருகிறது. ராமானுஜர் பிறந்த நட்சத்திரமான திருவாதிரையில், நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 6:30 மணியளவில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். 11:30 மணியளவில், ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகமும், 12:30 மணியளவில், தீபாராதனையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !