பத்ரகாளியம்மன் கோவில் ஆவணி மாத சிறப்பு பூஜை
ADDED :3724 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி மாத சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், ஆவணி மாத சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. பத்ரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. காளியம்மன் துதி பாடி, 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். கோவில் நிர்வாகி குமார் விழா ஏற்பாடுகளை செய்தார்.