உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்கா சுவாமி கோவிலில் பாலாலய பூஜை!

அக்கா சுவாமி கோவிலில் பாலாலய பூஜை!

புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்கா சுவாமி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடு துவங்கியுள்ளதையடுத்து, பாலாலய பூஜை நேற்று  நடந்தது.  வைத்திக்குப்பம் அக்கா சுவாமி கோவிலுக்கு, 2003ம் ஆண்டு பிப். 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டு முடிந்த நிலையில்,  தற்போது கும்பாபிஷேகம் செய்ய  முடிவு செய்து, அதற்கான பணி துவங்கியுள்ளது. கோவிலில் அக்கா சுவாமி சன்னதி,  மனோன்மணியம்மன், நந்திதேவர், அருட்சித்தர் நாராயண சுவாமி சன்னதிகள் நீங்கலாக, மற்ற சன்னதிகளுக்கு பாலாலய பூஜை நேற்று  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !