அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இத்தலத்தில் ராவணன் மகன் மேகநாதன், பஞ்சபாண்டவர்கள் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய் வற்றல் கொண்டு நடத் தப்படும் நிகும்பலா யாகம் சிறப்புவாய்ந்தது. மண்,பெண்,பொன் ஆசைகளை விட்டு இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி,சகல நன்மைகளும் கிடைக்கும்.ஆவ ணி மாத அம்மாவாசையான நேற்றுகாலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர் ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடைபெற்றன. மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டி நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பா ளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாட்டை சங்கர் குருக்கள் செய்திருந்தார்.அம்மாவாசையை முன்னிட்டு கும்பகோணத்தில் இருந்து அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.