உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விரிவான ஏற்பாடு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு விரிவான ஏற்பாடு!

கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாட கோவை மக்கள் தயாராகி வருகின்றனர். இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 1௭ல் கொண்டாடப்படுகிறது. செப்., 21ல் விசர்ஜன் விழா ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் கோவையில் நடக்கிறது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்த மாசுகட்டுப்பாடு வாரியம் தடை விதித்துள்ளது. காகித கூழ், கிழங்கு மாவு, களிமண், வாட்டர் கலர் உள்ளிட்ட ரசாயனம் இல்லாத பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் பார்ப்பதற்கு அதிக பொலிவு இருக்காது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.  கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாகுபலி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இவ்வாண்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இவ்வாண்டு கோவை நகரில், 1,008 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்துள்ளோம்.

காகிதக்கூழ் உள்ளிட்ட, நுாறு சதவீதம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை தான் நாங்கள் பிரதிஷ்டை செய் வோம். விழாவை முன்னிட்டு குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளோம். பூமார்க்கெட், தெப்பக்குளம் மைதானத்தில், செப்., 21 மதியம், 1:30 மணிக்கு விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. மாலை, 4:30மணிக்கு விசர்ஜன ஊர்வலம் தெப்பக்குளம் மைதானத்தில் துவங்கி முத்தண்ணங்குளத்தில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !