ஏழுமலையானுக்கு 200 பாட்டு
ADDED :3766 days ago
கலியுகம் தோன்றிய நாள் முதல், பக்தர்களைக் காப்பதற்காக திருமலையில் வெங்கடேசப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவருக்கு கலியுகவரதன் என்ற திருநாமம் உண்டு. ரிக் வேதத்தின் எட்டாவது அத்யாயத்தில் வேங்கடேசர் பற்றியும், பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், காப்பிய நுõலான சிலப்பதிகாரம் போன்றவற்றிலும் வேங்கடமலை பற்றிய குறிப்புகள் உள்ளன. பன்னிருஆழ்வார்களில் பத்துபேர் திருப்பதி வெங்கடேசரை பாடியுள்ளனர். அவரைப் பற்றி இருநுõறு பாசுரங்கள் உள்ளன.