திருமலை மூன்றாம் நாள் பிரம்மோற்சவ குதூகலம்!
ADDED :3668 days ago
சிம்ம வாகனத்தில் வலம்வந்த சீனிவாச பெருமாள்:
திருப்பதி: திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான (செப்-19)-ம் தேதி, உற்சவரான மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகா சக்தியும் வல்லமையும் கொண்ட சிம்ம வாகனத்தில் சுவாமி வலம்வருவதைக் காண பக்தர்கள் மாடவீதிகளில் திரண்டு இருந்தனர். பண்டிதர்கள் வேத கோஷமிட்டபடி சுவாமிக்கு முன் செல்ல அவர்களை தொடர்ந்து பல்வேறு மாநில பக்தர்களின் கோலாட்டம் உள்ளீட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பக்தன் பிரகாலாதனுக்காக பாதி மனிதன் பாதி சிங்கம் உருவம் கொண்டு நரசிம்ம அவதாரத்தில் வந்து துஷ்டனை அழித்த கதையை ஒரங்க நாடகமாக நடித்தபடி மாடவீதிகளில் வலம் வந்த கலைக்குழுவினரை பக்தர்கள் பாராட்டினர்.