கல்யாண காமாட்சி கோவிலில் உலக நன்மைக்கு சிறப்பு யாகம்
ADDED :3676 days ago
தர்மபுரி: தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில், உலக நன்மைக்காக சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடந்தது. தர்மபுரி, கோட்டை கல்யாண காமாட்சி கோவிலில் உலக நன்மைக்காக, வருட பவித்ரோத்ஸவ திருநாள் நிறைவு நாள் நிகழ்ச்சி, மூன்றாம் ஆண்டுப் பெருவிழா நேற்று நடந்தது. ஒரு வருடத்தில் கோவில்களில் நடக்கும் அனைத்து சிறப்பு விழாக்களின் ஒட்டுமொத்த புண்ய பயன்களின் பலனை சிவபரம் பொருளுக்கு அர்பணித்து, நான்கு காலங்கள் பூஜித்து வந்தனர். இதன் முக்கிய நாளான, நேற்று நிறைவு உலக நன்மைக்காகவும், கோவில் நன்மைக்காகவும் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜை நடந்தது.