உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பராமரிப்பின்றி சீரழியும் சிவன் கோவில்!

பராமரிப்பின்றி சீரழியும் சிவன் கோவில்!

உத்திரமேரூர்: பாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவில், முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பாலேஸ்வரம்  கிராமத்தில், பாலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கிராம கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. இதனால், சில  ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலின் முன் பகுதி இடிந்து விழுந்து உள்ளது. அப்பகுதிவாசிகள் இடிபாடுகளை அகற்றி, கோவிலை தற்போது  பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், ‘பழமையான இக்கோவிலை பராமரித்து பாதுகாக்க அதிகாரிகள்  முன்வரவில்லை. கோவில் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எங்களால் முடிந்த வரை பாதுகாத்து வருகிறோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !