உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா!

குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா!

புதுச்சேரி: திருவள்ளுவர் நகர் (டிவி நகர்) சாலை வசந்த நகரில் உள்ள குரு வேலாயுத ஈஸ்வரர் கோவிலில் நேற்று குரு பூஜை விழா நடந்தது. காலை  10:30 மணியளவில் கணபதி பூஜை, 11:00 மணிக்கு தேவாரம் படித்தனர். பின்,  சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை, பகல் 12:00 மணிக்கு  அன்னதானம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை வேலாயுத ஈஸ்வரர் ஆலய விழாக் குழுவினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !