உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை!

தாண்டிக்குடி: பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. சொர்ண பூஜை தொடர்ந்து வடை மாலை சாத்துதல், சந்தன காப்பு நடந்தது. சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் மற்றும் மிளகு தீபம் , தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திண்டுக்கல் எம்.பி., உதயகுமார், வேணுகோபாலு எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !