உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 61 இந்து கோவில்களுக்கு பூஜை பொருட்கள்

61 இந்து கோவில்களுக்கு பூஜை பொருட்கள்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் தொகுதியில், இந்து அறநிலையத்துறை மற்றும் கிராம கட்டுபாட்டில் உள்ள, 61 கோவில்களுக்கு, பூஜை உபயோக பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருப்புலிவனத்தில் நடந்தது. இந்து கோவில்களில் சிறு, குறு அளவிலான கோவில்கள் கணக்கெடுக்கப்பட்டு, அக்கோவில்களுக்கு தமிழக அரசு சார்பில், தட்டு, குத்துவிளக்கு, தொங்கு விளக்கு, மணி உள்ளிட்ட 3,000 ரூபாய் மதிப்பிலான பூஜை உபயோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி நேற்று, உத்திர மேரூர் தொகுதிக்கு உட்பட்ட, 61 கோவில்களுக்கு, பூஜை உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன. திருப்புலிவனம், வியாகரபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்த இந்நிழ்ச்சியில், கால்நடை துறை அமைச்சர் சின்னைய்யா, தேர்வு செய்யப்பட்ட அந்தந்த கோவில் பூசாரிகளிடத்தில் பூஜை உபயோகப் பொருட்களை வழங்கினார். இதில், சட்டமன்ற உறுப்பினர் கணேசன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் தரணிதரன், உத்திரமேரூர் பகுதி அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !