உடுமலை வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா!
ADDED :3659 days ago
உடுமலை: பெரிய வாளவாடி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, பிரம்மோற்சவம் நடந்தது. உடுமலை அருகே பெரிய வாளவாடியில், 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக புரட்டாசி சனிக் கிழமைகளில் திருவீதியுலா நடந்து வருகிறது. காலை, 6:00 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து, அபிேஷகம் செய்ப்பட்டு, உற்சவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலி த்தார். மாலை, 4:00 மணிக்கு வீதியுலா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.