தியாகதுருகம் பெருமாளுக்கு திருமஞ்சன விழா!
தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தியாகதுருகம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை தோறும் திருமஞ்சன விழா நடக்கிறது. கடந்த 3ம் தேதி, மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு மலை உச்சியில் சுவாமியை அலங்கரித்து, திருத்தளிகை வழிபாடும், அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. நேற்று முன்தினம் 4 வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கு தங்க காப்பு கவசம் அணிவித்து அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. நாயுடு சமூகத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர். சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ரங்கராஜிலு, ராதாகிருஷ்ணன், பிச்சாண்டிப்பிள்ளை, முருகன், நல்லாப்பிள்ளை, அபரஞ்சி, கண்ணன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.