உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி (செப்.17) ஐந்தாம் நாள்!

நவராத்திரி (செப்.17) ஐந்தாம் நாள்!

நவராத்திரியின் ஐந்தாம் நாளில் அம்பிகையை வைஷ்ணவியாக வழிபாடு செய்ய வேண்டும். அபய, வரத ஹஸ்தம் ண்டவளாக அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு, புனுகு, ஜவ்வாது சேர்த்த மல்லிகை, ரோஜா பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

மதுரை மீனாட்சி இன்று கோலாட்ட  அலங்காரத்தில் காட்சி அளிக்கிறாள். கன்னியர் ஆடும் விளையாட்டுகளில் கோலாட்டமும் ஒன்று. இரண்டு கோல்களை கையில் வைத்தபடி, பல பெண்கள் ஒன்று கூடி இந்த விளையாட்டை பாடிக் கொண்டே ஆடுவர். ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாட்கள் புதுமண்டபத்தில் கோலாட்ட திருவிழா நடக்கும். அப்போது கன்னிப்பெண்கள் கோலாட்ட ஒலி எழுப்பியபடி மீனாட்சிஅம்மன் பவனியின் போது உடன் வருவர். இந்த வழிபாட்டால், கன்னியருக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல்

பாடல்
வந்தே சரணம் புகும் அடியார்க்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !