காரைக்கால் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி!
ADDED :3764 days ago
காரைக்கால் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் 14.10.15ம் தேதி முன்தினம் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் 13ம் தேதி முதல் 22ம்தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி கொலு தர்பார்ரை திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். இன்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் பாலசுப்பிரமணியன், மரகதவேல், ரவிசந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.