செல்வ விநாயகர் கோவில் நவராத்திரி விழா துவக்கம்!
ADDED :3645 days ago
அன்னுார்: சொக்கம் பாளையத்தில் நவராத்திரி அன்னதான விழா, கொலு பூஜையுடன் துவங்கியது.
சொக்கம்பாளையத்தில், 75 ஆண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 48ம் ஆண்டு நவராத்திரி அன்னதான விழா நேற்றுமுன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கொலு வைக்கப்பட்டு, பூஜை நடந்தது. இரவு செல்வ விநாயகர் குழுவின் பஜனை நடந்தது. நேற்று அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. வரும், 16ம் தேதி மாலையில், தாசபளஞ்சிக மாதர் சங்கம் சார்பில், திருவிளக்கு வழிபாடு நடக்கிறது. 22ம் தேதி, மாலையில் சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு போட்டி நடக்கிறது. இரவு பஜனையுடன், சுவாமி திருவீதியுலா நடக்கிறது.