வானமாமலை ஜீயர் திருக்கோவிலுார் வருகை!
ADDED :3642 days ago
திருக்கோவிலுார்: ஸ்ரீமத் வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள், நேற்று பகல் 12:00 மணிக்கு, திருக்கோவிலுார் உலகளந்த பெரு மாள் கோவிலுக்கு வருகை புரிந்தார். பெரிய கோபுரம் அருகே திருக்கோவிலுார் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமி, பூர்ணகும்ப மரியாதையுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதிகளில் ஜீயர் மங்களாசாசனம் செய்ததையடுத்து, வானமாமலை வீதியில் உள்ள மடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜீயர் வரவேற்பு நிகழ்ச்சியில் உலகளந்தபெருமாள் கோவில் நிர்வாகிகள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.