உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்!

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்!

வியாசர்பாடி: கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால், நீர் விஷத்தன்மையாக மாறி விட்டதாக, பகுதிவாசிகள் புகார் கூறியுள்ளனர். விய  õசர்பாடியில், தொன்மை வாய்ந்த ரவீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கோவில் குளம் உள்ளது. சரிவர பராமரிப்பு இல்லாததால், குளத்தில் கழிவுநீர்   கலக்கிறது. ரசாயன கழிவுகளால் மாசடைந்த குளத்து நீர், தற்போது விஷத்தன்மையாக மாறிவிட்டதாக, பகுதிவாசிகள் கூறுகின்றனர். கடந்த சில   நாட்களாக குளத்து கரையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. 15 கிலோ எடை அளவு கொண்ட,  ௧௦க்கும்  மேற்பட்ட பெரிய மீன்கள் செத்து மிதந்தன.   இதனால், பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், கொடுங்கையூர், சர்மா   நகர், கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது.  சரிவர பராமரிப்பு இல்லாததால், கழிவுநீர் கலந்து   குளத்து நீர் விஷமாக மாறிவிட்டது. அதற்கு உதாரணமாக மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன. கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால்,   குளத்து நீர் வீணாவது மட்டுமின்றி, நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் நிலவுகிறது.  கோவில் குளத்திற்குள் கழிவுநீர் கலப்பதை முற்றிலும் தடுக்க   வேண்டும். குளத்து நீரை வெளியேற்றி துார்வாரி, பருவமழையின் போது மழைநீரை தேக்கும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.   இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !