சஷ்டி விரத ஐதீகங்கள் என்னென்ன?
ADDED :4039 days ago
1. முசுகுந்த சக்கரவர்த்தி வசிஷ்ட முனிவரிடம் சஷ்டி விரத மகிமையையும் விதிமுறையையும் கேட்டறிந்து அந்த விரதத்தை கடை பிடித்தான். அதன் பயனாக முருகப் பெருமானிடம் வேண்டிய வரங்கள் பெற்று இம்மை இன்பத்தையும், மறுமை இன்பத்தையும் அடைந்தான்.
2. சஷ்டி விரதத்தை முறையாக கடைப்பிடிப்போருக்கு இச்சா, கிரியா ஞான சக்திகளுக்கு தலைவனான முருகப் பெருமானின் பேரருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
3. சஷ்டி அன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலை பருகுவோருக்கு புத்திர பாக்கியம் உடனே கிட்டும்.
46. முன் வாசல் நிலைக்கு மேல் திருப்பதி வெங்கடாஜலபதி படத்தை வைக்கலாமா?
முன் வாசல் நிலைக்கு மேல் வெங்கடாசலபதி படத்தை வைப்பது நல்லதல்ல. வீட்டின் உள்ளே பூஜை அறையில் வைப்பதுதான் நல்லது. சரியானதும் கூட.