தெரிந்த சிவராத்திரி தெரியாத தகவல்கள்!
ADDED :4039 days ago
1. மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று அமாவாசைக்கு முதல்நாள் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
2. சிவாய நம என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கில்லை என்பது முன்னோர் வாக்கு.
3. பெண்களுக்குரிய ராத்திரி நவராத்திரி. அதுபோல் ஆண்களுக்குரிய ராத்திரி சிவராத்திரி அதனால் ஆண்கள் சிவராத்திரி விரதம் மேற்கொள்வது நல்லது.
4. சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலம் லிங்கோத்பவர் காலமாகும். இந்த நேரத்தில் சிவ வழிபாடு செய்வது நற்பலன்களை அள்ளித்தரும்.
5. மஹா சிவராத்திரி அன்று முதல் ஜாம பூஜையின் போது பயிற்றம் பருப்பும், இரண்டாம் ஜாமத்தில் பாயசமும், மூன்றாம் ஜாமத்தில் எள் அன்னமும், நான்காம் ஜாமத்தில் சுத்த அன்னமும் நைவேத்தியமாக படைப்பார்கள்.