கோயில் திருப்பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய போது பதிமூன்று சிலைகள் கண்டெடுப்பு!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவிளையாட்டம் கிராமத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெரு மாள் கோயில் உள்ளது. ÷ காயிலை பரம்பரை டிரஸ்டி முத்துசாமி என்பவர் நிர்வகித்து வருகிறார். 800 ஆ ண்டுகள் பழமையான இந்தகோயில் மிகவும் சிதிலமடைந்ததை அடுத்து திருப்பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கோயில்கட்ட அஸ்திவாரம் தோண் டும் பணி நடைபெற்றது. அப்போது 2 மீட்டர் ஆழத்தில் ஐம் பொன்னாலான ஸ்ரீ வரதராஜ பெருமாளின் உற்சவர் சிலை கிடைத்துள்ளது. தொடர்ந்து ÷ தாண்டிய போது 2 அடி உயரமுள்ள நரசிம்மர்,ஸ்ரீதேவி, பூ தேவி, ராமர்,லெட்சுமணர், சீதை, ஆழ்வார், ஆஞ்சனேயர் உள்ளிட்ட 13 ஐம்பொன் சி லைகளும், திருவா ட்சி, சக்கரம், துõபக்கால், வில், அம்பு உள்ளிட்ட 7 பொருட்களும் கிடைத்தன. இதனையறிந்த கிராம ம க்கள் கூட்டமாக வந்து தரிசனம்செய்தனர். தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ராகவன்,பெரம்யூர் இன் ஸ்பெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந் துவந்தனர். அவர்களிடம் கண்டேடுக் கப்பட்ட ஐம்பொன் சிலைகளை கோயில்நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அவர்கள் திருப்பணி கள் முடிந்ததும் சிலைகளை கோயிலுக்கு திருப்பி தரவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத் துள்ளனர்.