உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சரஸ்வதி பூஜையை மக்கள் விமரிசையாக கொண்டாடினர். கோவில்களில், சிறப்பு பூஜைகள்  நடந்தன.  இந்துக்கள் பண்டிகையில், முக்கியமான பண்டிகையாக நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும்  வீடுகளில், ஒன்பது படி அல்லது ஐந்து படிகள் அமைத்து கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு செய்து வருவது வழக்கம். கோவில்களில்,  நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு அலங்காரத்தில், அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நவராத்திரியின் கடைசி நாளும், முக்கிய நாளாக கருதப்படுவது சரஸ்வதி பூஜை. இந்த நாளில், அவரவர் தொழிலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், கல்வி  உபகரணங்கள், வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் தராசு, படிக்கல் போன்றவையும் சரஸ்வதியாக கருதி வழிபாடு செய்வது வழக்கம். இதனால்,  சரஸ்வதி பூஜைக்கு ஆயுத பூஜை என்ற பெயரும் உள்ளது. இந்தாண்டும், நவராத்திரி விழா  துவங்கியது. வீடுகளில், கொலு பொம்மைகள் வைத்து  சுண்டல் உள்ளிட்டவை படைத்து விழாவை கொண்டாடினர்.

அலைமோதிய கூட்டம் நேற்று கடைசிநாளான, சரஸ்வதி பூஜையையொட்டி, மக்கள் விழாவை கொண்டாடினர். நேற்றுமுன்தினமே கடைகளுக்கு  சென்று பூஜைகளுக்கு தேவையான பழங்கள், பொரி, கரும்பு, வாழை, பூஜை சாமான்கள், பூக்கள் உள்ளிட்டவை வாங்க ஆர்வம் காட்டியதால்,  பொள்ளாச்சி சத்திரம் வீதி, போலீஸ் ஸ்டேஷன் வீதி போன்ற பகுதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், கடைகளில் விற்பனை படு ÷ ஜாராக நடைபெற்றது. மக்கள் கூட்டத்திற்கேற்ப விழாவையொட்டி, திடீரென பல கடைகளும் ரோட்டோரத்தில் முளைத்தன. நகரம் மற்றுமின்றி  கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்ததால், அப்பகுதியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவில்களில் வழிபாடு சரஸ்வதி பூஜையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், சிறப்பு  அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மஞ்சள் அம்மன், குகன் அம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூ ஜைகள் நடந்தது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், முருகப்பெருமான் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.  பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூ ஜைகள் நடந்தன. இதுபோன்று, வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !