உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் திருவிளக்கு பூஜை!

வால்பாறை கோவில்களில் திருவிளக்கு பூஜை!

வால்பாறை: வால்பாறை பகுதி கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கொலு பொம்மைகளும் வைக்கப்பட்டு, தொடர்ந்து நாள் தோறும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள், பக்தி சொற்பொழிவு நடக்கிறது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழா நேற்றுமுன்தினம் மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல், வால்பாறை அண்ணாநகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !