கன்யகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா!
ADDED :3645 days ago
ஆனைமலை: ஆனைமலை கன்யகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. ஆனைமலை கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. பெண்கள் கோவிலில் பூக்கோலமிட்டு, அம்மன் மீது தெய்வப் பாடல்களை பாடி வழிபட்டனர். பகல் மற்றும் இரவு பூஜைகள், அர்ச்சனைகள் நடந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்தார். அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, குத்துவிளக்கு பூஜை செய்யப்பட்டன. இன்று அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஜம்பு சவாரி நடைபெறுகிறது.