ராமேஸ்வரத்தில் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இலவச தங்கும் விடுதிகள் மூடி கிடப்பதால் பக்தர்கள், யாத்ரிகர்கள் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் அவலம் உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்ரிகர்கள் வருகின்றனர். தனியார் லாட்ஜ்களில் அதிக கட்டணம் கொடுக்க விரும்பாத பக்தர்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கடற்கரைகள், ரதவீதிகள் மற்றும் சாலையோரங்களில் ஓய்வெடுக் கின்றனர். இதனால் திருடர்களிடம் உடைமைகளை பறிகொடுக்கும் பரிதாப சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2013ல் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.ஒரு கோடி செலவில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரு தங்கும் விடுதிகள் கட்டபட்டது. ஆண்டுகள் இரண்டு கடந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கிறது. இரவுநேரங்களில் சமூக விரோதிகளின் பாராக மாற்றப்படுகிறது. பிரசித்த பெற்ற கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்கள், யாத்ரிகர்கள் நலனை கருத்தில்கொண்டு விடுதியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.