உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

திருமலை பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

திருப்பதி: திருமலை நவராத்திரி பிரம்மோற்சவம், தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது.திருமலையில், 14ம் தேதி முதல், பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின், 8ம் நாளான, நேற்று முன்தினம் காலை, மலையப்ப சுவாமி, தன் உபய நாச்சியார்களுடன், தங்கத்தேரில் வலம் வந்தார்.அதே நாள் இரவு, கல்கி அவதாரத்தை நினைவுக்கூறும் குதிரை வாகனத்தில், மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று காலை, வராகசுவாமி சன்னிதி அமைந்துள்ள, ஸ்ரீவாரி திருகுளத்தருகே, உற்சவ மூர்த்தி, சக்கரத்தாழ்வாருக்கு, திருமஞ்சனம் நடந்தது. பின், பிரம்மோற்சவம் நிறைவின் அடையாளமாக, சக்கரத்தாழ்வாருக்கு, திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருக்குளத்தில் புனித நீராடினர். இரவு 7:00 மணிக்கு, உற்சவமூர்த்திகள் தங்கப் பல்லக்கில், மாடவீதிகளில் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !