மாகாளியம்மன் கோவில் நவசக்தி ஹோமம்
ADDED :3704 days ago
கருமத்தம்பட்டி: ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், நவசக்தி ஹோமம் மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி அடுத்த ராமாச்சியம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு விழா பூஜைகள், 24ம் தேதி மாலை, துவங்கின. சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து, மேளதாளத்துடன் தீர்த்தக் கலசங்கள் கொண்டு வரப்பட்டன. நேற்று காலை, 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் நவசக்தி ஹோமம் துவங்கியது. பூர்ணாஹுதி முடிந்து, ஸ்ரீமங்கள விநாயகர், மாகாளியம்மனுக்கு நவசக்தி கலச அபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனைக்குப்பின் பிரசாதம் வழங்கப்பட்டது.