பழநி மலைக்கோவில் ரோப்கார் 10 நாட்கள் நிறுத்தம்!
ADDED :3691 days ago
பழநி: புதிய கம்பி வடம் மாற்றம், பராமரிப்பு பணிகளுக்காக பழநி மலைக்கோவில் ரோப்கார் நாளை முதல் பத்து நாட்கள் நிறுத்தப்படுகிறது.பழநி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் நாள்தோறும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இதில் அக்.,31 முதல் நவ.,9 வரை பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.அதில் புதிதாக கம்பிவடம் மாற்றியும், பெட்டிகள், உருளைகள், பல்சக்கரங்களில் ஆயில், கிரீஸ் போன்றவை இட உள்ளனர். அதன்பின் குறிப்பிட்ட அளவு ஒவ்வொரு பெட்டிகளிலும் எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்.அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்து, பாதுகாப்பு குழுவினர் ஒப்புதல் வழங்கியபின், வழக்கம்போல் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ரோப்கார் இயக்கப்படும் என, பழநிகோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.