உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயில் நிதியை பக்தர்களுக்கு செலவிட வேண்டும் அர்ஜூன்சம்பத் கோரிக்கை

பழநி கோயில் நிதியை பக்தர்களுக்கு செலவிட வேண்டும் அர்ஜூன்சம்பத் கோரிக்கை

பழநி:பழநி கோயில் நிதியை பக்தர்களுக்கு செலவிட வேண்டும்,என இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். பழநியில் இந்துத்துவ அரசியல் மாநாடு நடந்தது. இதில் அவர் கூறியதாவது: தமிழக அரசியலில் ஆன்மிகத்தின் மூலம் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். தாழ்த்தப்பட்ட இனமக்கள் அதிகமாக மாட்டுஇறைச்சி உண்பதாக கூறுவது தவறு. அவர்கள் தான் மாடுகளை வளர்க்கின்றனர். தீண்டாமை இருள் அகற்றும் விதமாக தலித் மக்களுடன் நவ.,5 முதல் “சமத்துவ தீபாவளி” கொண்டாட உள்ளோம். காவேரியில் சாயக்கழிவுகள், இயந்திரங்களை வைத்து மணல் அள்ளுவதை தடுக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் பவானியில் நாளை மற்றும் 6ல் கருத்தரங்குகள் நடக்கிறது. மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கருத்தில் மாற்றம் இல்லை. மகாமகம் ஆன்மிக விழாவாக நடக்க முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்கவேண்டும். பழநிகோயில் நிதியை அக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பயன்படுத்த வேண்டும். தேர்தல்நேரத்தில் யாரை ஆதரிப்பது என முடிவு செய்யப்படும்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !