உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முதுமலை யானை!

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முதுமலை யானை!

சென்னை : அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் யானை இல்லை; கோவிலுக்கு யானை தரும்படி, வனத்துறையிடம் கேட்டிருந்தோம். இதை பரிசீலித்த வனத்துறை அதிகாரிகள், முதுமலை யானை முகாமில் உள்ள, 8 வயதான, மசினி என்ற யானையை, சமயபுரம் கோவிலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்காக, மசினிக்கு, கோவில் யானைக்குரிய பயிற்சியை, இரு பாகன்கள் அளித்து வருகின்றனர். இரண்டு வார பயிற்சியில் தேர்ச்சி பெற்றால், மசினி யானை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்படும்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !