விரதத்தால் தூய்மை பெறுவது மனமா அல்லது உடலா?
ADDED :3829 days ago
இரண்டும் தான். சஷ்டி விரதத்தை 6 நாட்கள் பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்து எரிக்கப் பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது. ஜீரண கருவிகளும் நல்ல ஓய்வு பெறுவதால் இரைப்பை, குடல்பகுதி தூய்மையும், பலமும் அடைகிறது.பக்தியில் ஒன்றி விடுவதால் தேவையற்ற சிந்தனை மனதில் எழுவதில்லை. மாறாக சாந்தம், பொறுமை, தூய்மை, நேர்மை போன்ற உயர்குணங்கள் உருவாகின்றன. சுருங்கச் சொன்னால், விரதத்தால்மனிதன் மாமனிதனாக உருவெடுக்கிறான் என்றால் மிகையில்லை.