உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய குழுவினர் நடனம்

ராமேஸ்வரம் கோயிலில் ரஷ்ய குழுவினர் நடனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் புகழ் பரப்பும் ரஷ்ய ஆன்மிக குழுவினர் நடனமாடி தரிசனம் செய்தனர்.உலக புகழ் பெற்ற ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் வருகின்றனர். நேற்று ரஷ்யா மாஸ்கோவில் உள்ள ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஆன்மிக இயக்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50 பேர், கோயில் நான்கு ரதவீதிகளில் பகவான் கிருஷ்ணரின் புகழ் பரப்பும் பஜனை பாடலை பாடி ஊர்வலம் வந்தனர். பின், கோயில் முன் பக்தி பரவசத்தில் நடனமாடி தரிசனம் செய்தனர். ரஷ்யா பக்தர்களின் ஆன்மிக நடனத்தை கண்ட, வட இந்திய பக்தர்கள் பலரும் பரவசத்தில் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !