உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மின்னும் யானை சிலை!

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மின்னும் யானை சிலை!

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள, கேசவன் என்ற யானை உருவச் சிலை, பைபர் கோட்டிங் செய்து, புதுப்பிக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், குருவாயூரில், புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலில், ஏராளமான யானைகள் பராமரிக்கப்படுகின்றன. கோவிலுக்கு சொந்தமான, கேசவன் என்ற யானை, 60 ஆண்டுகளாக, மூலவரின் சேவகனாக இருந்து, 1976ல் இறந்தது. மூலவரின் அருள் பெற்றதாக போற்றப்படும் இந்த யானைக்கு, கோவில் வளாகம் அருகே, 1982ல், 11.5 அடி உயரத்தில் உருவச் சிலை நிறுவப்பட்டது. ஆண்டுதோறும், ஏகாதசி திருவிழா நடப்பதற்கு முன், கேசவன் சிலைக்கு, கோவிலில் பராமரிக்கப்படும் யானைகள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு, யானைகள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும், யானைகளுக்கு உணவு வழங்கும், யானையூட்டு நிகழ்ச்சியும், வரும், 21ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, யானை சிலை புதுப்பிக்கும் பணி, இரு வாரங்களாக நடந்தது. பைபர் கோட்டிங் செய்திருப்பதால், கேசவன் உருவச்சிலை, நிஜ யானை எழுந்து நிற்பதுபோல், கம்பீரமாக மிளிர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !