உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடசென்னையில் 1,01008 லிங்க தரிசனம்

வடசென்னையில் 1,01008 லிங்க தரிசனம்

சென்னை: வடசென்னையில், இன்று, ஒரு லட்சத்து ஆயிரத்து எட்டு லிங்க தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை, கொத்தவால்சாவடியில் உள்ள கன்யகா பரமேஸ்வரி கோவிலில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு, ஒரு லட்சத்து ஆயிரத்து எட்டு லிங்க தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் கைலாயம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், சிறிய லிங்கங்களை கொண்டு, சிவ பார்வதி, விநாயகர், முருகன் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. த்துடன் ஸ்படிக லிங்கம், ஜோதிர்லிங்கம், நவரத்ன லிங்கம், மருந்தீஸ்வரர் லிங்கம், ராமேஸ்வர லிங்கம், மரகத லிங்கம் உள்ளிட்ட பலவகை லிங்கங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் காலை, 7:30 மணி முதல், 11:30 வரையிலும், மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரையிலும், லிங்கங்களை பார்வையிடலாம். வாசவி ஸ்தோத்ர ரஞ்ஜனி குழு சார்பில் பார்வையாளர்களுக்கு, பிரசாதம் வினியோகிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !