உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி மகாலட்சுமி பூஜை!

உலக அமைதி வேண்டி மகாலட்சுமி பூஜை!

குமாரபாளையம்: குமாரபாளையம் பாண்டுரங்கள் கோவிலில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மகாலட்சுமி பூஜை நடந்தது. குமாரபாளையம் அடுத்த விட்டல்புரி பாண்டுரங்கர் கோவிலில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, உலக அமைதி வேண்டி மகாலட்சுமி பூஜை நடந்தது. மகா தன ஆகர்சன மகாலட்சுமி பூஜையில், பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

இதில், 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன. இதையொட்டி பாண்டுரங்கர், மகாலட்சுமி, விடோபா தாயார் ஸ்மிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !