கோவில்களில் சிறப்பு பூஜை: தரிசித்து மகிழ்ந்த பக்தர்கள்!
ADDED :3657 days ago
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நேற்று தீபாவளி முன்னிட்டு அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பெற்றோரிடம் ஆசி வாங்கிய பிறக பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களுக்குச் சென்றனர். கரூர் ஈஸ்வரன்கோவில், தான்தோன்றி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில், மாரியம்மன் கோவில், காமாட்சியம்மன் கோவில், வேம்பு மாரியம்மன் கோவில், பண்டரிநாதன் கோவில், வெண்ணைமலை முருகன் கோவில், மாயனூர் செல்லாண்டியம்மன் கோவில், கருப்பத்தூர் சிங்கபுரீஸ்வரர் கோவில், கருப்பத்தூர் ஐயப்பன் கோவில், புகழிமலை முருகன்கோவில், குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவில்,
கடம்பனேஸ்வரர் கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் போன்ற கோவில்களுக்கு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர்.